சென்னை:தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெறுவோரின் பெயரை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்; மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார்; பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்; சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியருக்கு வழங்கப்படுகிறது.
சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்;
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்;
தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன்;
உமறுப்புலவர் விருது - மம்மது;
கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன்;
கம்பர் விருது - பாரதி பாஸ்கருக்கு வழங்கப்படுகிறது.
ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்;
மறைமலையடிகள் விருது - சுகிசிவம்;
அயோத்தி தாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ் ஆகியோருக்கு வழங்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
அதேபோல, தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்;
சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE