புதுடில்லி, : கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் ஆவணங்கள் அச்சு வடிவில் வழங்கப்படாது. கொரோனா வைரஸ் பரவலால் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். தனி 'செயலி'பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சி நடக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்பது குறைக்கப்பட்டது. செலவை குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அச்சடிப்பது குறைக்கப்பட்டது.முதலில் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் தனியார் பொருளாதார நிபுணர்களுக்கு அச்சடிக்கப்பட்ட ஆவணங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்.பி.,க்களுக்கும் நிறுத்தப்பட்டது.அனைத்தும் 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது. பட்ஜெட் ஆவணங்களை பார்ப்பதற்காக எம்.பி.,க்களுக்கு என தனியாக செயலி உருவாக்கப்பட்டது.நிகழ்ச்சி ரத்துவழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை 'சூட்கேசில்' வைத்து மத்திய நிதி அமைச்சர்கள் எடுத்து வருவர். அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றினார். துணிப் பையில் வைத்து எடுத்து வந்தார். கடந்தாண்டு 'டேப்லெட்'டை பையில் வைத்து எடுத்து வந்தார்.தற்போது ஆவண பாதுகாப்புக்காக மட்டும் சில பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE