போன் பேசியபடி கொடி ஏற்றியவரால் சர்ச்சை

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (9)
Advertisement
கிருஷ்ணகிரி:ஒரு கையில் மொபைல் போன் பேசியபடி, ஒரு கையில் தேசியக் கொடியை ஊராட்சி தலைவரின் கணவர் ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ராமசந்திரம் கிராமத்தில், ஊராட்சி துவக்கப் பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் தலைமையில், ஊராட்சி தலைவர் வளர்மதி சார்பில், அவரது கணவர் குணசேகரன், இடது கையில் மொபைல் போன்
 போன் பேசியபடி கொடி ஏற்றியவரால் சர்ச்சை

கிருஷ்ணகிரி:ஒரு கையில் மொபைல் போன் பேசியபடி, ஒரு கையில் தேசியக் கொடியை ஊராட்சி தலைவரின் கணவர் ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ராமசந்திரம் கிராமத்தில், ஊராட்சி துவக்கப் பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியர் தலைமையில், ஊராட்சி தலைவர் வளர்மதி சார்பில், அவரது கணவர் குணசேகரன், இடது கையில் மொபைல் போன் பேசியபடியே, வலது கையால் தேசியக் கொடியை ஏற்றினார்.
தலைமை ஆசிரியர், ஊராட்சி தலைவர் அருகில் இருக்க, எந்தப் பதவியிலும் இல்லாத தனி நபர் கொடியேற்றியதுடன், அதையும் போன் பேசியபடி ஒரே கையில் ஏற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeans bala - CHENNAI,இந்தியா
27-ஜன-202216:21:39 IST Report Abuse
jeans bala இரண்டு வருடத்திற்க்கு முன்பு சென்னை அனகாபுத்தூர் போன் பேசியபடி கோடி ஏற்றி சர்ச்சை
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
27-ஜன-202216:11:20 IST Report Abuse
தமிழன் இவனுகளுக்கெல்லாம் என்ன பிரச்சனன்னே தெரியல்ல.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
27-ஜன-202214:24:25 IST Report Abuse
THINAKAREN KARAMANI நம் தேசத்துக்கும் தேசியக்கொடிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது உள்மனதில் இருந்து வரவேண்டும். தமிழக அரசு நம் தேசியக்கொடியை பள்ளி,கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் இந்த இந்தத் தகுதியை உடைய நபர்கள்தான் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்ற வரைமுறையை உருவாக்க வேண்டும் அதை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தவும் வேண்டும். தகுதியில்லாத எந்த நபர்களையும் கொடியேற்ற அனுமதிக்கக் கூடாது. மீறுபவர்களுக்கு சரியான தண்டனையும் வழங்க வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X