கர்ப்பிணியருக்கு ரத்த சோகை நோய் முருங்கை மூலம் நிவர்த்தி செய்ய திட்டம்

Added : ஜன 27, 2022
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கர்ப்பிணியருக்கு ஏற்படும், ரத்த சோகையை நிவர்த்தி செய்ய, முருங்கை சூப் மூலம், நிவர்த்தி செய்யப்படும் என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சத்துணவு மையங்கள் மூலம், கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கர்ப்பிணியருக்கு ஏற்படும், ரத்த சோகையை நிவர்த்தி செய்ய, முருங்கை சூப் மூலம், நிவர்த்தி செய்யப்படும் என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சத்துணவு மையங்கள் மூலம், கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பம் தரித்த நாள் முதல், கர்ப்பிணியர் அருகில் உள்ள, சத்துணவு மையங்களில், பதிவு செய்து கொள்கின்றனர்.அவர்களுக்கு, சத்து மாவு, சுகாதார துறையினர் மூலம், இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது, 11 ஆயிரத்து, 506 கர்ப்பிணிகள், சத்துணவு மையங்களில், பதிவு செய்துள்ளனர். இதில், கர்ப்பிணிகளில் பெரும்பாலானோர், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், லலிதா கூறியதாவது:மாவட்டத்தில், கர்ப்பிணியர்களில், 50 சதவீதத்திற்கும் மேல், ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கர்ப்பம் தரித்ததும், பதிவு செய்த உடனே, அவர்களுக்கு பரிசோதனை நடத்தி, ரத்த சோகை இருந்தால், அவர்களுக்கு, சுகாதார துறை மூலம், இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.
கூடுதலாக, நாங்கள், எங்கள் துறையினர், தன்னார்வலர்கள் மூலம், இரும்பு சத்தினை அதிகரிக்க, முருங்கை உணவு வகைகளை சேர்க்க, வலியுறுத்தி வருகிறோம்.முருங்கை சூப், வீடு தோறும் வழங்கப்படும். மேலும், முருங்கையிலான உணவு வகையினை அவர்கள் எடுத்துக் கொள்ள, அறிவுறுத்தி வருகிறோம்.
அவர்களின் வீடுகளில், முருங்கை மரம் வளர்க்கவும், ஆலோசனை அளித்து வருகிறோம். குழந்தை உருவானதில் இருந்து, மூன்று மாதத்திற்குள், இவற்றை வழங்கி, ரத்த சோகையினை நிவர்த்தி செய்ய திட்டமிட்டு, பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X