பதிப்புரிமை இன்றி படம் சுந்தர் பிச்சை மீது வழக்கு

Added : ஜன 27, 2022
Advertisement
மும்பை:மும்பையில் பதிப்புரிமை இல்லாமல் திரைப்படத்தை வெளியிட்டதாக கூறி பாலிவுட் இயக்குனர் அளித்த புகார் அடிப்படையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பிரபல பாலிவுட் இயக்குனரான சுனில் தர்ஷன் வசித்து வருகிறார். இவர் 'ஜான்வர் அண்டாஸ்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.இந்நிலையில்

மும்பை:மும்பையில் பதிப்புரிமை இல்லாமல் திரைப்படத்தை வெளியிட்டதாக கூறி பாலிவுட் இயக்குனர் அளித்த புகார் அடிப்படையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பிரபல பாலிவுட் இயக்குனரான சுனில் தர்ஷன் வசித்து வருகிறார். இவர் 'ஜான்வர் அண்டாஸ்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.இந்நிலையில் தன் திரைப்படத்தை பதிப்புரிமை இல்லாமல் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கூறி கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது போலீசாரிடம் சுனில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு 'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா' என்ற இவரது திரைப்படம் வெளியானது. இதையடுத்து அந்த திரைப்படம் 'காப்பிரைட்ஸ்' எனப்படும் பதிப்புரிமை இல்லாமல் சட்டவிரோதமாக யூ - டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் பதிப்புரிமை இல்லாமல் வெளியிடப்பட்டதால் மும்பை போலீசாரிடம் சுனில் புகார் அளித்து உள்ளார். அதன்படி கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை யூ - டியூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுதம் ஆனந்த உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X