201 ஆண்டுகளாக ஒரே ஆல மரத்தில் வாழும் 'வவ்வால்கள்' பட்டாசுகள் வெடிக்க கிராமத்தில் தடை

Added : ஜன 27, 2022
Advertisement
திருத்தணி:பறவை இனங்கள் அழிந்து வரும் இக்காலத்தில், திருத்தணி அருகே, ஒரு கிராமத்தினர், 201 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான 'வவ்வால்'களை வளர்த்தும், பாதுகாத்தும் வருகின்றனர்.வவ்வால்கள் கிராமத்தை விட்டு, எங்கும் போகக்கூடாது என, தீபாவளி மற்றும் முக்கிய திருவிழாக்களில் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி
 201 ஆண்டுகளாக ஒரே ஆல மரத்தில் வாழும் 'வவ்வால்கள்' பட்டாசுகள் வெடிக்க கிராமத்தில் தடை

திருத்தணி:பறவை இனங்கள் அழிந்து வரும் இக்காலத்தில், திருத்தணி அருகே, ஒரு கிராமத்தினர், 201 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான 'வவ்வால்'களை வளர்த்தும், பாதுகாத்தும் வருகின்றனர்.
வவ்வால்கள் கிராமத்தை விட்டு, எங்கும் போகக்கூடாது என, தீபாவளி மற்றும் முக்கிய திருவிழாக்களில் சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் உள்ளது சிறுகுமி கிராமம். இங்கு, 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.இந்நிலையில், சிறுகுமி கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையின் ஓரம் பெரிய ஆல மரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தில், பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
பகலில் மரத்தில் ஒய்வு எடுத்து, இரவு நேரத்தில், இறை தேடிச் செல்கிறது.இந்த வவ்வால்களை யாரும் பிடிக்கக்கூடாது, வேட்டையாடவும் கூடாது என, கிராம மக்கள் எப்போதும் ஆல மரத்தையும் வவ்வால்களையும் பாதுகாத்து வருகின்றனர்.வவ்வால்கள் அதிக சத்தம் போட்டால், உடனே கிராம மக்கள் ஒன்றுகூடி, மரத்தடிக்கு சென்று, அங்குள்ள வெளி நபர்கள், அதிக சத்தம் போடுபவர்களை விரட்டி அடிப்பர்.
தீபாவளி மற்றும் முக்கிய விழாக்களின் போது சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரிரு ஆண்டுகளாக, சிறுவர்கள் மட்டும் சத்தம் குறைவாக பட்டாசுகளை வெடிக்க கிராமத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
கிராமத்திற்கு பெருமை
எங்கள் கிராமம் அருகே உள்ள ஆல மரத்தில், 3,000க்கும் மேற்பட்ட 'வவ்வால்'கள், 201 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. அதாவது என் தாத்தா காலத்திற்கு முன்பே, இந்த வவ்வால்கள் இந்த ஆல மரத்தில் வாழ்த்து வருவதாக என் தாத்தா கூறி வருகிறார். இந்த வவ்வால்களை யாரும் பிடிக்காத வண்ணம் தற்போதும் பாதுகாத்து வருகிறோம். வெளி நபர்கள் வேட்டையாட வந்தது தெரிந்தால் அவர்களை எங்கள் கிராமத்திலிருந்தே விரட்டுவோம்.
பட்டாசுகள் வெடிக்காத வண்ணம் கிராம மக்கள் பார்த்துக் கொள்வதுடன், பகல் நேரத்தில் அடிக்கடி ஆல மரம் இருக்கும் இடத்திற்கு சென்று பாதுகாத்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக ஒரே மரத்தில் வவ்வால் வாழுவது எங்கள் கிராமத்திற்கு பெருமை.
- எம்.வெங்கடமுனி, 54.சிறுகுமி கிராமம், திருத்தணி ஒன்றியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X