சென்னை:அரசு 'இ - சேவை' மைய செயல்பாடுகள் குறித்து மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய மாநில அரசுகளின் சேவைகளை பெற தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் வழியாக அரசு 'இ - சேவை' மையங்களை செயல்படுத்தி வருகிறது.இ - சேவை மையங்களில் பிறப்பு சான்றிதழ் வருமான சான்றிதழ் ஆதார் பதிவு செய்தல் மின் கட்டணம் செலுத்துதல் ஜாதி சான்றிதழ் பெறுதல் உட்பட 90க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப் படுகின்றன.
ஆனால் அரசு இ - சேவை மையங்கள் முறையாக செயல்படுவதில்லை; மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது.இந்நிலையில் இ - சேவை மையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து அரசு கேபிள் 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:
அரசு 'இ - சேவை' மையங்களில் முறையான சேவை வழங்குவதில்லை எனவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் வருகின்றன.மேலும் இ - சேவை மையங்களுக்கு தேவையான காகிதம் 'பிரின்டர் டோனர்' போன்றவை சரியாக வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்டம் தோறும் ஆய்வு செய்ய நிறுவனத்தின் இயக்கக பொது மேலாளர் திட்டமிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதற்காக மையங்களை சுத்தமாக வைக்கவும் பெயர் பலகை இலவச தொலைபேசி எண் சேவை பலகைகள் போன்றவற்றை பொது மக்கள் பார்வையில் தெரியும்படி சரியாக வைக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE