செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டால் அதிக லாபம் பெறலாம். உயர் விளைச்சல் ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால், அதிகளவு சத்துகள் மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.இதை பரிசோதனை செய்யும் வகையில், விவசாயிகள் மண் பரிசோதனை நிலையத்தில், 20 ரூபாய் செலுத்தி, நிலத்தின் மண்ணை பரிசோ தனை செய்யலாம்.
மண்ணில் உள்ள பேரூட்டங்கள் மற்றும் நுண்ணுாட்டங்களின் வளத்திற்கு ஏற்ப பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணுாட்ட சத்துகள் வழங்க வேண்டும்.இதன் மூலம் உரச்செலவு குறைவதோடு, மண்ணின் வளத்தை பெருக்கி அதிக மகசூல் பெறலாம். மேலும் அதிக உரமிடுவதால் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம்.
மண் வளத்தை அதிகரிக்க தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.மகசூல் அதிகரிப்புவேளாண் துறை மூலம் நெல், பயறு, வேர்க்கடலை மற்றும் தென்னை பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள் உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றன.
அவற்றை பயிர்களுக்கு வழங்குவதால், பயிருக்கு தேவையான நுண்ணுாட்டங்கள் ஒருங்கே கிடைப்பதுடன், 20 முதல் 25 சதவீதம் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களின் தேவை குறைக்கப்பட்டு, 15 முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி நுண்ணுாட்ட உரங்களை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE