ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் இன்று ஒப்படைப்பு

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (12)
Advertisement
புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' இன்று (ஜன.27)டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக கடந்த ஆண்டு
ஏர் இந்தியா நிறுவனம் டாடா   குழுமம், ஒப்படைப்பு

புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' இன்று (ஜன.27)டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.


latest tamil news



இதையடுத்து ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் நடவடிக்கையை துவங்கியது. எனினும் ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இன்று (ஜன.27) ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
27-ஜன-202212:05:22 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN ,@தங்கராஜ். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் 30ம் தேதியானால் சம்பளம் மட்டும் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் இப்படி தான் நடக்கும். இப்போது கூட பாருங்கள் ஒரு ஏர் இந்தியா ஊழியர் கூட இதை எதிர்த்து ராஜினாமா செய்யவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் மனோபாவம். அடுத்து தயாராக இருப்பது BSNL. இதை முன்னேற்ற அந்த துறை ஊழியர்கள் எதாவது செய்திருக்கிறார்களா? இன்னமும் சும்மா உட்கார்ந்து கொண்டு தானே சம்பளம் வாங்கிக் கொண்டு உள்ளார்கள். பல ஊழியர்கள் சொந்த தொழில் அல்லது வேறு இடத்தில் வேலை செய்து கொண்டு இங்கும் சம்பளம் பென்ஷன் வாங்கிக் கொண்டு அங்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு உள்ளார்கள். இதற்கு சிவப்பு வர்ணத்துக்கு சொந்தக்காரர்கள் வேறு பாதுகாப்பு. கம்யூனிசத்தின் தத்துவமே தொழிற்சாலை சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. உற்பத்தியை குறைக்க கூடாது. உற்பத்திக்கு எந்த பங்கமும் ஏற்படுத்த கூடாது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உற்பத்தி செய்ய வேண்டும். அதன் பிறகு தொழிலாளர் நலம் தொழிலாளர் ஊதியம் அனைத்தும் வருகிறது. இதை இப்போது யார் பின்பற்றுகிறார்கள். உற்பத்தி உயர்வு இல்லை. ஆனால் ஊதிய உயர்வு தரவேண்டும்.தொழிற்சாலை இயந்திரங்கள் எந்த பாதிப்பு ஆனாலும் பரவாயில்லை தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் தரமாக தரவேண்டும். இது எப்படி சாத்தியம்? கேட்பதும் கைநீட்டி வாங்குவதும் முறையா? சில காலம் முன்பு தபால் துறை தனியார் கூரியர் நிறுவனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது. தந்தி துறை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. ஆயினும் தபால் துறை மத்திய அரசின் வழிகாட்டுதல் ஏற்று அத்துறையில் உள்ளோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் செயல் பட்டதால் இன்றைக்கு அந்த துறை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது போல் அனைத்து அரசு நிறுவனங்களின் ஊழியர்களும் செயல் பட்டால் ஏன் டிஜிட்டல் இந்தியாவில் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
27-ஜன-202211:18:01 IST Report Abuse
Apposthalan samlin நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விக்கலாம் ஆனால் லாபத்தில் இயங்குகிற நிறுவனங்களான ரயில் வ பிஸ்னல் லைப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களை ஏன் விற்கிறார்கள் ?
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202211:12:52 IST Report Abuse
Samathuvan காயலான் கடைக்கு போக இருந்ததை ஒன்றியம் ரொம்ப திட்டமிட்டு பாவம் இவர் தலையில கட்டிட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X