உத்திரமேரூர்:உத்திரமேரூர் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சியில் பட்டஞ்சேரி, நீரடி, மணித்தோட்டம், நல்லுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள, தங்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், வளைகாப்பு, குழந்தைகளின் பிறந்த நாள் விழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும், அரசியல் கட்சி கூட்டங்கள் போன்றவைக்கும் தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டி உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில், குறைந்தபட்ச வாடகையாக 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்த பெரும் செலவு செய்ய வேண்டி உள்ளது.
வறுமையில் வாழ்வோர் வாடகை கொடுத்து, மண்டபங்களில் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவது பெரும் சவாலாகவே உள்ளது.எனவே, உத்திரமேரூர் பேரூராட்சியில், சமுதாயக்கூடம் ஏற்படுத்தினால், ஏழை மக்கள் பயன் பெறுவதோடு, பேரூராட்சிக்கும் வருமானம் கிடைக்க கூடிய நிதி ஆதராமாக இருக்கும் என்பதால், சமுதாயக்கூடம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE