காஞ்சியில் திருநீலகண்டர் குருபூஜை விழா

Added : ஜன 27, 2022
Advertisement
காஞ்சிபுரம்:அறுபத்துமூவர் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் குருபூஜை விழா நேற்று, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் திருநீலகண்டர் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் நாயனாருக்கு, தனி சன்னிதி உள்ளது.நேற்று, அவரது குருபூஜையை முன்னிட்டு ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள நீலகண்டர்

காஞ்சிபுரம்:அறுபத்துமூவர் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் குருபூஜை விழா நேற்று, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் திருநீலகண்டர் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் நாயனாருக்கு, தனி சன்னிதி உள்ளது.நேற்று, அவரது குருபூஜையை முன்னிட்டு ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள நீலகண்டர் நாயனாருக்கும், இந்த மண்டலத்தில் உள்ள நாயனாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நீலகண்ட நாயனார் உற்சவர், நான்கு ராஜவீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நீலகண்டர் சத்திரத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவனடியார் திருகூட்டம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை, பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம் சார்பில் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X