கம்பம் : கம்பமெட்டு, குமுளி செக்போஸ்ட்டுகளில் அரசு உதவி பெறும் பள்ளி அலுவலர்கள் மட்டும் பணியில் ஈடுபடுத்துவதாக புலம்புகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்தல், இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதிசெய்தல் பணியில் பல் துறை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பணிக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களை செக்போஸ்ட் பணிக்கு அனுப்புகின்றனர்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், பிற துறையினரை இப்பணிக்கு அனுப்புவதில்லை. இதனால் அரசு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கூறியதாவது :பரவல் அதிகரித்த போதும், பொதுப் போக்குவரத்து கேரளாவிற்கு அனுமதித்துள்ளதால் சோதனை சாவடி பணியில் பயன்இல்லை. எங்களை குறிவைத்து பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். துறை அதிகாரிகள் அரசுபள்ளி பணியாளர்களை பணிக்கு அனுப்பவில்லை என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE