போலீஸ் டைரி...: செங்கல்பட்டு

Added : ஜன 27, 2022
Advertisement
'குடி' போதையில் இளைஞர் பலிமறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த, கலிவந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் மகன் வெங்கடேசன், 45. கூடுவாஞ்சேரி விஷ்ணுப்ரியா நகரில் வசித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.சொந்த ஊருக்கு வந்த வெங்கடேசன் மது அருந்தி, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் குளத்தில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கி

'குடி' போதையில் இளைஞர் பலி
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த, கலிவந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் மகன் வெங்கடேசன், 45. கூடுவாஞ்சேரி விஷ்ணுப்ரியா நகரில் வசித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.சொந்த ஊருக்கு வந்த வெங்கடேசன் மது அருந்தி, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் குளத்தில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். மறைமலை நகர் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பூ வியாபாரி தற்கொலை
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் செந்தில்குமார் 36; அதே பகுதியில் பூக்கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி சத்யா, ஒரு மகள் உள்ளார்.தம்பதி இடையே நேற்று முன்தினம் சண்டை நடந்துள்ளது. இதில் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மறைமலை நகர் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
சாராயம் விற்றோருக்கு 'காப்பு'
செய்யூர்: செய்யூர் அருகே, ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்த கோபு, 35, குடியரசு தினமான நேற்று, மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதிக விலையில் கள்ளச்சாராயம் விற்றார்.தகவலறிந்த செய்யூர் போலீசார், அப்பகுதிக்கு சென்று கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கோபுவை கைது செய்தனர்; 10 லிட்டர் அளவு சாராயத்தை கைப்பற்றினர்.
பைக் திருடிய மூவர் கைது
சூணாம்பேடு: இடைக்கழிநாடு பேரூராட்சி, கடப்பாக்கம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே வசிப்பவர் சாமிக்கண்ணு மகன் குபேரன், 42.நேற்று முன்தினம் இரவு, இவர் வீட்டில் நிறுத்தியிருந்த 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தை, மூன்று பேர் திருடிச் சென்றனர்.அவர்களை பிடிக்க முயன்று, முடியாத குபேரன் தகவல் அளித்தார். சூணாம்பேடு காவல் நிலையம் சார்பில், இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பைக் திருடர்களை விரட்டி சென்று, பனையூர் அருகே மடக்கி பிடித்தனர்.
விசாரித்ததில் மூவரும், கூவத்துார் கதிர்வேல் 24, சூர்யா, 24, மற்றும் பாலா, 20, என்பதும், மூவரும் புதுச்சேரியில் மது அருந்தி, வீட்டிற்கு செல்லும் வழியில் பைக் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X