கண் பரிசோதனை முகாம்
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மின்னல் கிராமத்தில், ஏழை மாணவர்கள் நலச்சங்கம்- மின்னல், ரோட்டரி சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, மருத்துவ முகாம் நடத்தின.இலவச கண் பரிசோதனை முகாமில், பார்வை குறைபாடு உள்ள 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
உண்டியலில் ரூ.7.74 லட்சம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கை எண்ணப்பட்டது.அறநிலையத் துறையின் உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சரஸ்வதி உள்ளிட்டோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள், ஏழு உண்டியல்களின் காணிக்கையை எண்ணினர்.இதில், 210 கிராம் தங்கம், 78 கிராம் வெள்ளி, 7.74 லட்சம் ரூபாய் கிடைத்ததாக, அறநிலைய அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE