வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றுவது தொடர்பான பணி விதிகளில் மாற்றம் செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் ஒன்பது மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பட்டியலில் ஒடிசாவும் தற்போது சேர்ந்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு பணிகளுக்கு மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளை விடுவிப்பதை மாநிலங்கள் குறைத்துள்ளன.
இதையடுத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாற்றுவது தொடர்பாக பணி விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டப்படி மத்திய அரசு பணிகளுக்கு மாநில அரசுகள் உரிய அதிகாரிகளை அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு கேட்கும் குறிப்பிட்ட அதிகாரிகளை, குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பாத பட்சத்தில், மத்திய அரசே அவர்களை மத்திய அரசு பணிகளுக்கு மாற்ற உத்தரவிட முடியும்.மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'மத்திய அரசின் முயற்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது' என, இம்மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலமும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு, முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE