ஆப்கானிஸ்தானுக்கு உதவுவது பற்றி மேற்கத்திய நாடுகள் ஆலோசனை

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (8)
Advertisement
ஆஸ்லோ : ஆப்கானிஸ்தானுக்கு மனித நேய அடிப்படையில் உதவி செய்வது பற்றி மேற்கத்திய நாடுகள், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஆலோசனை நடத்தின. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகியதையடுத்து, அங்கு தலிபான் பயங்கரவாதிகள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் பெண்கள் மீதான வன்முறை, தாக்குதல், கெடுபிடிகள் அதிகரித்து உள்ளன.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆஸ்லோ : ஆப்கானிஸ்தானுக்கு மனித நேய அடிப்படையில் உதவி செய்வது பற்றி மேற்கத்திய நாடுகள், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ஆலோசனை நடத்தின.



latest tamil news


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகியதையடுத்து, அங்கு தலிபான் பயங்கரவாதிகள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் பெண்கள் மீதான வன்முறை, தாக்குதல், கெடுபிடிகள் அதிகரித்து உள்ளன.

கெஞ்சல்ஆப்கனில் தலிபான் ஆட்சியை இந்தியா உட்பட எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால், ஆப்கனுக்கு செய்து வந்த உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன.இதனால் ஆப்கனில் நிதி நெருக்கடியுடன் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பசி, பட்டினியால் ஆப்கன் மக்கள் கடுமையாக வாடி வருகின்றனர்.


latest tamil news


மனித நேய அடிப்படையில் ஆப்கனுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் உணவு பஞ்சத்தை சமாளிக்க தங்களுக்கு உதவ வேண்டும் என, பல நாடுகளிடமும் தலிபான்கள் கெஞ்சி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கனுக்கு மனித நேய அடிப்படையில் உதவிகள் செய்வது பற்றி, ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த கூட்டத்தில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் துாதர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில், ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டகியும் பங்கேற்றார். மூன்று நாள் தொடர்ந்து நடந்த இந்த கூட்டம், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நெருங்க முடியும்கூட்டத்தில், ஆப்கனுக்கு மனித நேய உதவிகள் செய்வது பற்றி மேற்கத்திய நாடுகள் ஆலோசித்துள்ளன.

மேலும் ஆப்கனில் மனித உரிமைகள் மீறல், பெண்கள் உரிமைகள் மீறல் ஆகியவை பற்றியும் விவாதித்தன. இது பற்றி ஆப்கன் அமைச்சர் முட்டகி கூறுகையில், ''இது போன்ற கூட்டங்களில் பங்கேற்பதன் வழியாக, மற்ற நாடுகளுடன் நாங்கள் நெருங்க முடியும் என நம்புகிறோம். ஆப்கனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி செய்யும் என நம்புகிறோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
27-ஜன-202214:55:35 IST Report Abuse
Kumar இந்த தலீபான்கள் ஆட்சி சூப்பராக இருக்கும் என்று இங்கு கூலிபான்கள் கூவினார்களே. பாம்புக்கு யாரவது பால் வார்ப்பார்களா? இங்கு பாலையும், சோறையும் தின்று விட்டு அவர்கள் செய்யும் அட்டூழியம் தெரியாதா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
27-ஜன-202212:58:54 IST Report Abuse
R Ravikumar mutt
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
27-ஜன-202210:21:55 IST Report Abuse
செல்வம் இது எப்படி இருக்கு தெரியுமா? சும்மா போற ஆச்சாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வையி. அவனுங்க மதமும் கடவுளும் அவனுகளை காப்பாற்றும்.. மூடிட்டு வி்ட்டுட்டு போங்க.. அப்புறம் குத்துதே குடையுதேன்னுகிட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X