சென்னை : குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தி களை, மாவட்டங்களில் காட்சிப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். டில்லி குடியரசு தின அலங்கார அணிவகுப்பில், தமிழகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, 'டில்லி விழாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள், சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம் பெறும். அவை தமிழகம் முழுதும் காட்சிப்படுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, நேற்று சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், மூன்று அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
அந்த ஊர்திகள் முதற்கட்டமாக, கோவை, ஈரோடு, மதுரை மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சென்னை தீவுத்திடலில், அலங்கார ஊர்திகளை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சாமிநாதன், சக்கரபாணி, சுப்பிரமணியன், சேகர்பாபு, மஸ்தான், மதிவேந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE