தமிழகத்தில் கடலோர, உள்மாவட்டங்களில் இன்று(ஜன.,27) மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | |
Advertisement
சென்னை: உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் அதனை ஒட்டிய உள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான
வேலூர்,
திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை,
காஞ்சிபுரம்,
திருவண்ணமாலை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
திருச்சி,
அரியலூர்,
மதுரை,
சிவகங்கை,
விருதுநகர்,
தேனி,
தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X