வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெறுவோரின் பெயரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
![]()
|
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்; மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார்; பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்; சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியருக்கு வழங்கப்படுகிறது.
சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்; அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்; தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன்; உமறுப்புலவர் விருது - மம்மது; கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன்; கம்பர் விருது - பாரதி பாஸ்கருக்கு வழங்கப்படுகிறது.ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்; மறைமலையடிகள் விருது - சுகிசிவம்; அயோத்தி தாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ் ஆகியோருக்கு வழங்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
![]()
|
அதேபோல, தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்; சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement