தேய்பிறை அஷ்டமி பூஜை

Added : ஜன 27, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது.மாலையில் அபிஷேக, ஆராதனை நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு காரணமாக பக்தர்கள் இன்றி வழிபாடு நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X