நீலமங்கலம் ஏரிக்கரையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை| Dinamalar

நீலமங்கலம் ஏரிக்கரையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை

Added : ஜன 27, 2022 | |
கள்ளக்குறிச்சி-நீலமங்கலம் ஏரிக்கரை மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்திற்கு கூத்தக்குடி சாலை வழியாக செல்வது சுற்று வழி என்பதால், ஏரிக்கரை பாதையை கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரிக்கரை வழியாக சென்று

கள்ளக்குறிச்சி-நீலமங்கலம் ஏரிக்கரை மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்திற்கு கூத்தக்குடி சாலை வழியாக செல்வது சுற்று வழி என்பதால், ஏரிக்கரை பாதையை கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏரிக்கரை வழியாக சென்று வருகின்றனர். மேலும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன.கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் இந்த சாலை தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏரிக்கரை பாதையினை தார்சாலையாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X