3 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : வன விலங்குகள் சுதந்திரமாக உலவுவதற்காக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களை, வேறு இடத்துக்கு குடியமர்த்துவது குறித்து கருத்து தெரிவிக்க, மூன்று மாவட்டங்களின் கலெக்டர்கள் நாளை ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரியது உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள்


சென்னை : வன விலங்குகள் சுதந்திரமாக உலவுவதற்காக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களை, வேறு இடத்துக்கு குடியமர்த்துவது குறித்து கருத்து தெரிவிக்க, மூன்று மாவட்டங்களின் கலெக்டர்கள் நாளை ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsதந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரியது உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன. சத்தியமங்கலம் வழியாக, பெங்களூரு -- கோவையை இணைக்கும் நெடுஞ்சாலையில் நடக்கும் சாலை விபத்துக்களில், 10 ஆண்டுகளில் 3 சிறுத்தைகள் உட்பட, 152 விலங்குகள் இறந்துள்ளதாகவும், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில், இரவு 9:௦௦ முதல் அதிகாலை 6:௦௦ மணி வரை, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கும்படி, வழக்கறிஞர்கள் எம்.சந்தானராமன், டி.மோகன் மற்றும் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கூறினர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பன்னாரியில் இருந்து திம்பம் வரையில், இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்.


latest tamil news


தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும், மாநில நெடுஞ்சாலைத் துறை செயலரும், பிப்ரவரி 3ம் தேதி, காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக பகுதியில், தெங்குமரஹடா கிராமம் இருப்பதாகவும், தெங்குமரஹடா -- பன்னாரி சாலையில், 25 கி.மீ., சாலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வருவதாகவும், இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புலி மற்றும் இதர வன விலங்குகளின் இனப்பெருக்க இடமாகவும் உள்ளது.வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமம் அமைந்துள்ளது. 1952ல், 500 ஏக்கர் நிலம், கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டு, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்காக குத்தகைக்கு விடப்பட்டது. தற்போது, குத்தகைக்கு வழங்கப்பட்டவர்கள், உள்குத்தகைக்கு வேறு பலருக்கு அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வன விலங்குகளின் நடமாட்டத்தால், இந்த கிராமம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அதனால், வேறு இடத்துக்கு, கிராம மக்களை குடியமர்த்தினால், விலங்குகள் சுதந்திரமாக உலவ ஏதுவாக இருக்கும். நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களின் கலெக்டர்களிடம் இருந்து திட்டம் வர வேண்டும் என்றும், அதற்கு வனத்துறை ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மூன்று மாவட்டங்களின் கலெக்டர்களும், நாளை, காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும். வனத்துறை தலைமை பாதுகாவலர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
27-ஜன-202217:49:04 IST Report Abuse
Nellai tamilan இரவு ஒன்பது மணியில் இருந்து காலை ஆறு மணி வரை அந்த சாலைகளை முழுவதுமாக அடைத்து விடுவது நிசசயமாக வனவிலங்குகளை நிம்மதியை தரும். நமது வீட்டிற்கு உள்ளே நடுராத்திரியில் நம் உறங்கும் சமயம் யாராவது வண்டி ஒட்டிக் கொண்டு இருந்தால் நமக்கு இடஞ்சலாக தானே இருக்கும்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202214:45:32 IST Report Abuse
Samathuvan மஞ்சகாமாலை உள்ளவன்னுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் என்பது போன்றதுதான்....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202214:21:27 IST Report Abuse
Samathuvan நாய்க்கு தெரியும் அதன் எஜமான் யாரென்று, அதுபோல தான் இந்த வனவிலங்கோடு ஒன்றி போய் வாழும் இந்த கிராம மக்களும். எதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஆக வனவிலங்குகள் மக்களை தாக்கும் சம்பவம் நடக்கிறது அதுவும் அந்த வனவிலங்குகளுக்கு மனிதனால் ஏதாவது ஆபத்து வரும் பட்சத்தில் மட்டுமே. இதை ஒரு காரணாமாக வைத்து அரசு செய்யும் எந்த காரியமும் உள்நோக்கம் உடையது. அப்படியே செய்தாலும் அந்த கிராம மக்களுக்கு, இடம் பெயருவதால் அவர்களுடைய வாழ்க்கை தரத்திற்காக அரசு என்ன செய்யும் என்பதை தெளிவாக அந்த கிராம மக்கள் விளங்கி, உறுதி பாத்திரத்தை கையில் வாங்கி கொண்டு வெளியேறவும். இல்லை என்றால் அதோ கதிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X