தினமும் உங்க பேருல ஒரு அறிக்கை வெளியாகுது... நீங்க தான் வெளியிடுறீங்களா...

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (3)
Advertisement
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: அரியலுார் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவர்கள் முதலில் கற்று புரிந்து கொள்ள வேண்டும்.தினமும் உங்க பேருல ஒரு அறிக்கை வெளியாகுது... நீங்க தான் வெளியிடுறீங்களா... அல்லது மண்டபத்துல யாராவது எழுதி, உங்க கையெழுத்தைப்
விஜயகாந்த், சீமான்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: அரியலுார் மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவர்கள் முதலில் கற்று புரிந்து கொள்ள வேண்டும்.


தினமும் உங்க பேருல ஒரு அறிக்கை வெளியாகுது... நீங்க தான் வெளியிடுறீங்களா... அல்லது மண்டபத்துல யாராவது எழுதி, உங்க கையெழுத்தைப் போட்டு அனுப்புறாங்களா...?



பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை
: தமிழக தென்னை விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பலன் அடைவர்.


நல்ல யோசனை தான்... மத்திய அரசிடம் பேசி, மானியம் வாங்கி தந்தீங்கன்னா, இந்த திட்டத்தை நிறைவேற்றிடலாம்... செய்வீங்களா...?



தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முதலில் திருமாவளவன் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆனா, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கிற அவர் மேல நடவடிக்கை எடுப்பாங்களா...? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல அந்தக் கட்சிக்கு இருக்கிற சொற்ப ஓட்டுகளையும் இழக்க மாட்டாங்களே....!



நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான, 'டிபாசிட்' தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.


latest tamil news




அட விடுங்க சார்... போட்ட தொகைக்கு மேல பல மடங்கு எடுக்கிறது தானே, தேர்தல் அரசியல்... அதனால, இதெல்லாம் அவங்களுக்கு பெரிய விஷயமே இல்லை... கடன் வாங்கியாவது டிபாசிட் கட்டிடுவாங்க பாருங்களேன்...!



அ.தி.மு.க., முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி:
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 'டாஸ்மாக்' மதுபான கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதாரணமாக, இதுவரை டாஸ்மாக் மதுபான கடைகளே இல்லாத பள்ளிபாளையம் நகராட்சியில், புதிதாக இரண்டு கடைகள் துவக்கப்பட்டுள்ளன.


உங்க ஏரியாவுல ரெண்டு கடைகளை, நீங்க ஆட்சியில இருக்கும்போதே திறக்கலை... இப்பவாவது திறந்தாங்களேன்னு உங்க ஏரியா 'குடி'மகன்கள் சந்தோஷப்படுறதை மறைத்து, குற்றம் சொல்றீங்களே...!


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-ஜன-202217:31:10 IST Report Abuse
DVRR ஏன்னா காட்டுமிராண்டிகள் தான் காட்டுமிராண்டி பாஷை பேசுவார்கள் என்று அர்த்தம் ஆகின்றது அவர்கள் ஒவ்வொரு செயலிலும்.
Rate this:
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
27-ஜன-202212:09:14 IST Report Abuse
Karthikeyan அம்மா இன்றைக்கு இட்லி சாப்பிட்டார்.. பூரி சாப்பிட்டார்.. பொங்கல் சாப்பிட்டர்னு சில ஆண்டுக்கு முன்னால அறிக்கைகள் வந்ததே அப்போ நீங்க எங்க சார் போயிருந்தீங்க?
Rate this:
SRINIVASAN V - chennai,இந்தியா
27-ஜன-202217:26:20 IST Report Abuse
SRINIVASAN Vகரெக்ட் சார் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X