நீதிபதிகள் பதவி நேர்முக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்தது செல்லும்

Added : ஜன 27, 2022 | |
Advertisement
சென்னை : மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான நேர்முகத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 2019 டிசம்பரில், மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வில்

சென்னை : மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான நேர்முகத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கடந்த 2019 டிசம்பரில், மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத இருவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

.நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்தது, நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளுக்கு முரணானது; எழுத்து தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களை ஒன்றாக கணக்கிட்டு, பணி நியமனம் வழங்க, மனுக்களில் கோரப்பட்டது.
மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'விதிகளில் இல்லாதபோது, நேர்முகத் தேர்வில் கட் -- ஆப் மதிப்பெண் நிர்ணயிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, மனுதாரர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.

உயர் நீதிமன்றம் சார்பில், வழக்கறிஞர் பி.விஜய் ஆஜராகி, ''பொது அறிவு, சட்ட அறிவு உள்ளிட்ட திறனை தீர்மானித்து, தகுதியை கண்டறிய நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அறிவிப்பாணையில் குறைந்தபட்ச மதிப்பெண் பற்றி கூறப்பட்டுள்ளது.''தேர்வு முடிவை அறிவிக்கும்முன், குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்ததை எதிர்த்து யாரும் வழக்கு தொடரவில்லை. குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க விதிகளில் தடை ஏதும் இல்லை,'' என்றார்.

மனுக்களை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க தடை உள்ளது என்ற வாதத்தை ஏற்க முடியாது. அறிவிப்பாணையில், நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்வின் எந்த கட்டத்திலும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பங்கேற்று விட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்ச்சி பெறவில்லை என்ற உடன், அதை எதிர்க்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க, நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளில் எந்த தடையும் இல்லை. எனவே, குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயித்த நடவடிக்கையில், சட்டவிரோதம் எதுவும் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X