சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கிரானைட் குவாரியில் லித்தியம் கிடைக்குமா?

Added : ஜன 27, 2022
Advertisement
பிரிட்டனைச் சேர்ந்த புத்திளம் நிறுவனமான பிரிட்டிஷ் லித்தியத்திற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள், கார்ன்வால் பகுதியிலிருக்கும், கிரானைட் குவாரி ஒன்றில் ஒரு மாறுபட்ட ஆய்வை மேற்கொண்டனர். ஐந்து ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிறகு, கிரானைடிலிருந்து, லித்தியம் எனப்படும் உலோகத்தை பிரித்தெடுக்கும் வித்தையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.பூமியிலிருந்து
 கிரானைட் குவாரியில் லித்தியம் கிடைக்குமா?

பிரிட்டனைச் சேர்ந்த புத்திளம் நிறுவனமான பிரிட்டிஷ் லித்தியத்திற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள், கார்ன்வால் பகுதியிலிருக்கும், கிரானைட் குவாரி ஒன்றில் ஒரு மாறுபட்ட ஆய்வை மேற்கொண்டனர். ஐந்து ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிறகு, கிரானைடிலிருந்து, லித்தியம் எனப்படும் உலோகத்தை பிரித்தெடுக்கும் வித்தையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கிரானைட் பாறைகளில் ரேகை, ரேகையாக பல தாதுக்கள் இருப்பதுண்டு. அதில் மைக்காவும் ஒன்று. கிரேனைட் பாறைகளை துாளாக்கி, துாய்மைப்படுத்தி மைக்காவைப் பிரித்து, அயனிப் பரிமாற்றத்திற்குள்ளாக்கி, இறுதியில் லித்தியம் கார்பனேட்டை தனியே எடுக்கும் முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். கிரானைட் குவாரியிலேயே நிகழ்த்தும் இந்த ரசவாதத்திற்கு மூன்று தனித்தனி காப்புரிமைகளை பெற பிரிட்டிஷ் லித்தியம் விண்ணப்பித்துள்ளது. இந்த முறை வாயிலாக, தினமும் தற்போது 5 கிலோ லித்தியத்தை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. இன்னும் வேகப்படுத்தினால், ஆண்டுக்கு 21 ஆயிரம் டன்கள் லித்தியம் உற்பத்தி செய்ய அவர்களால் முடியும்.

இன்று தங்கத்தைவிட மிகவும் வேண்டப்படும் உலோகமாக லித்தியம் மாறியிருக்கிறது. காரணம், விரைவில் உலகெங்கும் சாலைகளை ஆக்கிரமிக்கவிருக்கும் மின்சார வாகனங்களுக்கு, அடிப்படையான லித்தியம் அயனி மின்கலன்களில் லித்தியம் பயன்படுகிறது. சிலி, ஆஸ்திரேலியா, சீனா, அர்ஜென்டினா, போன்ற சில நாடுகளில்தான் லித்தியம் சுரங்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் கிரானைட் சுரங்கங்கள் உள்ளன. எனவே, அவை இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக லித்தியம் தயாரிக்கும் நாடுளாக மாற முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X