நிலத்தின் உள் மையப்பகுதி, கொதிக்கும் பிழம்பாகவே இருக்கிறது. இருந்தாலும், பூமி உருவானபோது இருந்ததைவிட, பூமி குழம்பின் வெப்பம், கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளாக, குறைந்து வருவது புவியியல் உண்மை.
அது எவ்வளவு வேகமாக குறைந்து வருகிறது, என்பது குறித்து அந்தக்கால விஞ்ஞானிகள் ஒருமதிப்பீடு செய்திருந்தனர். ஆனால், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் ஈ.டி.எச்.ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கணக்குப்படி, முன்பு கணித்ததைவிட பூமியின் நடுவெப்பப்பகுதி வெப்பம் தணிந்து வருகிறது.
நிலத்தின் ஆழ் மையப்பகுதியில் இருக்கும் தாதுக்கள் எந்த அளவுக்கு வெப்பத்தை தாக்குப் பிடித்து வைத்திருக்கும் என்பதை கணித்துப் பார்த்தபோது, பூமி நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக தணிந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது.
இதற்காக பூவுலகவாசிகள் கவலைப்படவேண்டியதில்லை. என்னதான் வேகமாக பூமிப் பிழம்பு குளிர்ந்து வந்தாலும், முற்றிலும் சூடு தணிந்து போவதற்கு இன்னும் சில பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE