கோவிலுக்கு 1.5 ஏக்கர் நிலம் வழங்கிய 80 வயது மூதாட்டி

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (15)
Advertisement
கூடலுார்: கூடலுார் அருகே, 80 வயது மூதாட்டி, தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம், தான் சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் சூண்டி பகுதியில், புஷ்பம்மாள், 80, என்பவர் வசித்து வருகிறார். ஆதரவற்ற அவரது உணவு தேவையை, அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.இறை நம்பிக்கை உள்ள அவர், தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை, சூண்டி
கோவில்,  நிலம்,  மூதாட்டி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கூடலுார்: கூடலுார் அருகே, 80 வயது மூதாட்டி, தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம், தான் சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் சூண்டி பகுதியில், புஷ்பம்மாள், 80, என்பவர் வசித்து வருகிறார். ஆதரவற்ற அவரது உணவு தேவையை, அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.இறை நம்பிக்கை உள்ள அவர், தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை, சூண்டி விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். தற்போது, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை, விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக வழங்கி, கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

புஷ்பம்மாள் கூறுகையில்,'' ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லாருக்கும் நல்லதே நடக்கும்,'' என்றார்.


latest tamil news


கோவில் கமிட்டி தலைவர் பாஸ்கரன் கூறுகையில்,'' பெரிய மனசுள்ள மூதாட்டி தன்னிடம் இருப்பதை எல்லாம் இறைவனுக்கு வழங்கி வருகிறார். இறைவன் அவருக்கு துணை இருக்கிறார். கடந்த ஆண்டு, வழி தவறி வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போன அவரை, அப்பகுதி இளைஞர்கள் ஐந்து நாட்கள் தேடி கண்டுபிடித்து மீட்டனர். இறைவன் அருளால், ஆரோக்கியத்துடன் இருந்தார். கிராம மக்கள் அவருக்கு என்றும் ஆதரவாக இருப்பர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Alaska,யூ.எஸ்.ஏ
27-ஜன-202220:29:42 IST Report Abuse
sam we come to this world nothing and die with nothing .. Then why we are greedy.. I mean me. She is good hearty person.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-ஜன-202216:57:56 IST Report Abuse
DVRR திருட்டு திராவிட மடியல் அரசு அந்த கோவிலை விதித்து இந்த சொத்து எல்லா சொத்தையும் ஆட்டை போட்டுவிடும் விரைவில் இவர்கள் போகும் வேகத்தை பார்த்தல் 200 கோவில் இடிப்பு 250 நாளில் கின்னஸ் புக் ஆப் வொர்ல்டு ரெகார்டஸில் வரப்போகின்றது
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202216:56:57 IST Report Abuse
Samathuvan தப்பு பண்ணிடீங்களே என்னருமை பாட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X