தடுப்பூசியிடமிருந்து தப்பிக்கும் ஒமைக்ரான்: ஐ.சி.எம்.ஆர்., ஆய்வில் தகவல்

Updated : ஜன 27, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய சமீபத்திய ஆய்வில், இயற்கையாக மற்றும் தடுப்பூசி மூலம் உண்டான நோய் எதிர்பாற்றலிலிருந்து புதிய கோவிட் வகையான ஒமைக்ரான் தப்பிக்கும் திறன் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.இந்த ஆய்வு பற்றி ஐ.சி.எம்.ஆர்., கூறியதாவது: ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தியை பெறுகின்றனர். இது
Omicron, Generated Antibodies, Effective, All Variants, Concern, ICMR, ஒமைக்ரான், தடுப்பூசி, ஐசிஎம்ஆர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய சமீபத்திய ஆய்வில், இயற்கையாக மற்றும் தடுப்பூசி மூலம் உண்டான நோய் எதிர்பாற்றலிலிருந்து புதிய கோவிட் வகையான ஒமைக்ரான் தப்பிக்கும் திறன் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.

இந்த ஆய்வு பற்றி ஐ.சி.எம்.ஆர்., கூறியதாவது: ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தியை பெறுகின்றனர். இது ஒமைக்ரான் மட்டுமின்றி டெல்டா உட்பட மற்ற தீவிர வைரஸ் வகைகளுக்கு எதிராகவும் செயல்புரியும் ஆற்றல் கொண்டுள்ளது. ஒமைக்ரானால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி டெல்டா வகையை திறம்பட சமாளிக்கிறது.


latest tamil news


மீண்டும் டெல்டா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் மூலம் டெல்டாவை ஒமைக்ரான் இடமாற்றம் செய்யலாம். இது ஒமைக்ரானுக்கான குறிப்பிட்ட தடுப்பூசி செயல்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த ஆய்வில், கோவிட் வைரஸ் வகைகளான பி1, ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிரான இம்யூனோகுளோபுலின் ஜி ஆன்டிபாடி மற்றும் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை (NAbs) ஆய்வு செய்தனர்.

குறுகிய காலத்திற்குள், ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மை மற்றும் தடுப்பூசி அல்லது இயற்கையாக உருவான நோயெதிர்ப்பாற்றலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டுள்ளது. ஒமைக்ரானின் இத்திறன் கவலையளிக்கக் கூடியது, மேலும் இது பற்றி ஆராயப்பட வேண்டும். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரியவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம் பருவத்தினர் என ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜன-202221:11:38 IST Report Abuse
அப்புசாமி அதான் தடுப்பூசியை பொதுமக்களிடம் விக்கப் பாக்குறாங்களோ?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
27-ஜன-202220:08:24 IST Report Abuse
Tamilan ஒமைக்ரானால் பாதிப்புகள் மிக மிக குறைவு-நிபுணர்கள் . நோயால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் - நிவுணர்கள் . என்னே வளர்ச்சி , விஞ்சான வளர்ச்சி?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X