கோவை: காபித்துாளில் களிமண் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை, வீட்டிலேயே எளிய சோதனையில் கண்டறிந்து விட முடியும்.
அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்யும் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கவனத்துடன் இல்லையெனில், கலப்பட கொள்ளையர் நம் உடல் நலத்தை காவு வாங்கி விடுவர்.மக்கள் விரும்பி குடிப்பதால் காபித்துாள் விலையும் அதிகம்; விற்பனையும் அதிகம். இதை சாக்காக பயன்படுத்தி, கலப்பட கும்பல், அதில் களிமண்ணை கலந்து விடுவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.
இதை வீட்டில் செய்யும் எளிய சோதனையில் கண்டுபிடித்து விட முடியும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் காபித்துாள் போட்டு விட்டு, 5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். கலப்படம் இல்லாத காபித்துாள் என்றால், தண்ணீரின் அடிப்பகுதியில் எதுவும் படிந்திருக்காது.கலப்படம் செய்யப்பட்ட காபித்துாள் என்றால், கண்ணாடி பாத்திரத்தின் அடிப்பகுதியில் சேறு போல படிந்திருக்கும். அதை கையில் தொட்டு தேய்த்துப் பாருங்கள்; கலப்படம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
'உணவுப் பண்டங்களில் கலப்படம் குறித்து ஏதேனும் புகார் இருந்தால், வாட்ஸ்அப் புகார் எண், 94440 42322 மூலம் தெரிவிக்கலாம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE