200 பைக்குகள் திருடிய 2 பேர் கைது

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 200 பைக்குகள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலுார் கிரின் சர்க்கிள் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக ஒரே பைக்கில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை

வேலுார்: வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 200 பைக்குகள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலுார் கிரின் சர்க்கிள் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக ஒரே பைக்கில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்த அஜித்குமார், 33, காந்திநகரை சேர்ந்த இந்திராகுமார், 24, என்பதும், பைக் திருடர்களான அவர்கள், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் கடந்த ஆறு மாதத்தில், 200 பைக்குகளை திருடியது தெரியவந்தது.போலீசார் அவர்களை கைது செய்து, ஒன்பது பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202216:02:43 IST Report Abuse
Lion Drsekar காவலர்களுக்கு பாராட்டுக்கள் அதே நேரத்தில் நமது ஆழ்ந்த அனுதாபங்கள், காரணம் இவர்கள் மீண்டும் வெளியே வந்து பல கலைகளைக் கற்று தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள், மீண்டும் இவர்கள் பெயர், புதிய தொழில் பற்றிய செய்திகள் செய்தியாக வெளிவரும், நாமும் படித்துவிட்டு நாம் பாதிக்கப் படவில்லை என்ற நிலையில் வாழ்வோம், இதுதான் இன்றய நிலை, இதற்க்கு முடிவே இல்லாமல் போகிறது, இதற்க்கு ஒரே வழி காவலர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும், வேறு வழி இல்லை, காட்டுவிலங்குகள் போல் செயல்படும் சமூக விரோதிகளின் கைகளில் இன்று ஜனநாயகம் சிக்கி பல இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டே போகிறது, இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு தனி நபர்களும் ஒவ்வொரு சமூக விரோதிகளை வேலைக்கு அமர்த்திக்கொண்ட வாழ்க்கை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும், தவறாக இருந்தால் மன்னிக்கவும், வாடகைக்கு ஓட்டுனரை வைத்த கார்கள் ஒட்டுகிறோமோ அதே போன்று பாதுகாப்புக்கு தனியாக இவர்களையே வேலைக்கு வைத்துக்கொவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விட்டது, இருந்தும் இல்லாமல் , எல்லாம் இருந்தும் எதுவுமே செய்யமுடியாமலும் தவிக்கும் காவல் துறைக்கு நாம் எப்படி உதவுவது என்றே தெரியவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X