மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு மன்மதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. திருக்கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம் பிள்ளை என்பவரின் வசம் உள்ளது. அந்த இடத்தை தியாகராஜன், என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கமர்சியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு தியாகராஜன் வாடகை செலுத்தாததால் கடந்த 2016ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை வட்டாட்சியர் விஜயராகவன் முன்னிலையில் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை திமுக எம்.பி., தவறான நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்சியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. மன்மதீஸ்வரர் ஆலயத்தில் எம்.பி., ராமலிங்கத்திடம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE