பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை: 2 பேர் சரண்| Dinamalar

பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை: 2 பேர் சரண்

Added : ஜன 27, 2022 | கருத்துகள் (5) | |
அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன்(19). இவர் பைனான்ஸ் நடத்தி வந்தார். இன்று காலை 11 மணிக்கு அன்னூரில் கோவை ரோட்டில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.போலீசார் விசாரணையில் சரணடைந்த இருவரில் ஒருவர், அன்னூர்
பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை: 2 பேர் சரண்

அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன்(19). இவர் பைனான்ஸ் நடத்தி வந்தார். இன்று காலை 11 மணிக்கு அன்னூரில் கோவை ரோட்டில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

போலீசார் விசாரணையில் சரணடைந்த இருவரில் ஒருவர், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன்(20). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருபவர். மற்றொருவர் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜராஜன் (22) மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

முதல்கட்ட விசாரணையில் மூவரும் இந்து முன்னணியில் இருந்தனர். கொலையான சரவணன் அவர்களிடமிருந்து விலகி தனியாக பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்து முன்னணியிலும் இருந்து விலகிய சரவணன் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை நடந்துள்ளது போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X