வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் கோவிட் பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டன.
டில்லியில் தினசரி கோவிட் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, ஊரடங்கு தளர்வு குறித்து டில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், டில்லி மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கோவிட் குறைந்து வருவதால்,
டில்லியில் வார இறுதி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கு ரத்து
கடைகள் தினமும் திறந்திருக்கலாம்
உணவகங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம்.
திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் பங்கேற்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதேநேரத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் செய்யப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE