பவானி: ஈரோடு மாவட்டம், பவானி அருகே காடையம்பட்டியை சேர்ந்தவர் ருக்மணி, 55. இவரது கணவர் கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானி ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த, 24 இரவு ருக்மணி அவரது வீட்டின் முன்புறம், மூன்றே முக்கால் பவுன் தாலிக்கொடி கிடந்துள்ளதை பார்த்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், அது தங்களது இல்லை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, நேற்று காலை ருக்மணி பவானி போலீஸ் ஸ்டேஷன் சென்று, தாலிக்கொடியை ஒப்படைத்தார். சற்று முன்புதான், நகையை காணவில்லை என பவானி, செங்காடு பகுதியை சேர்ந்த கோகிலா என்பவர் புகாரளிக்க வந்திருந்தார். இவர், அரசின் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் கணக்கெடுக்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். 24ல், காடையம்பட்டி பகுதிக்கு கணக்கெடுப்பு பணிக்கு சென்றபோது, தாலிக்கொடி காணாமல் போனதாக கூறியுள்ளார். ருக்மணி கொண்டு வந்த தாலிக்கொடி, கோகிலாவுடையது என்பதை உறுதி செய்த போலீசார், ருக்மணி கையாலேயே கோகிலாவிற்கு அணிவிக்க சொல்லி நகையை திரும்ப ஒப்படைத்தனர், ருக்மணியை, பவானி டி.எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டி பரிசு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE