ஈரோடு வனச்சரகத்தில் 17 பேருக்கு கொரோனா

Added : ஜன 27, 2022
Advertisement
ஈரோடு: ஈரோடு வனச்சரகத்தில் பணியாற்றும், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, சூளை அடுத்த ரோஜா நகரில் மாவட்ட வன அலுவலகம், மாவட்ட தலைமை வன பாதுகாவலர் அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் மூவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வனச்சரக

ஈரோடு: ஈரோடு வனச்சரகத்தில் பணியாற்றும், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, சூளை அடுத்த ரோஜா நகரில் மாவட்ட வன அலுவலகம், மாவட்ட தலைமை வன பாதுகாவலர் அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் மூவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வனச்சரக அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களில் பணியாற்றும், 44 பேருக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், சிலருக்கு மட்டும் அதிக பாதிப்புகள் இருந்ததால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக, சுகாதார பணியாளர்கள் மூலம் வனச்சரக அலுவலகங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X