டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கோபியில் மாநாடு

Added : ஜன 27, 2022
Advertisement
கோபி: ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின், 16ம் ஆண்டு மாநாடு கோபியில் நடந்தது. தலைவர் முருகையா தலைமை வகித்தார். துணை செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றினார். துணைத்தலைவர் பெரியசாமி வரவேற்றார். சம்மேளன துணைத்தலைவர் பொன்பாரதி பேசினார். மிகவும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும், டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்

கோபி: ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின், 16ம் ஆண்டு மாநாடு கோபியில் நடந்தது. தலைவர் முருகையா தலைமை வகித்தார். துணை செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றினார். துணைத்தலைவர் பெரியசாமி வரவேற்றார். சம்மேளன துணைத்தலைவர் பொன்பாரதி பேசினார். மிகவும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும், டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரமான முககவசம், கையுறை, சானிடைசர் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி, இ.எஸ்.ஐ., திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத்தலைவர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X