அதிகாரிக்கு கொரோனா; நகராட்சி ஊழியர்கள் பீதி

Added : ஜன 27, 2022 | |
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.விருத்தாசலம் நகராட்சி துப்புரவு அலுவலர் முத்துகணேஷ், 52. கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள கொரோனா கண்காணிப்பு மைய பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் (ஜன.,25) கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், காந்திநகர் நகர்ப்புற ஆரம்ப

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கு தொற்று உறுதியானதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

விருத்தாசலம் நகராட்சி துப்புரவு அலுவலர் முத்துகணேஷ், 52. கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள கொரோனா கண்காணிப்பு மைய பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் (ஜன.,25) கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், காந்திநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, அவர் மருத்துவர்கள் பரிந்துரையுடன், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இவருக்கு முன்பு, துப்புரவு அலுவலராக பணிபுரிந்த குமார் என்பவர், கொரோனா தொற்று பாதித்து, திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X