காணாமல் போன அருணாச்சல பிரதேச சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைத்தது சீன ராணுவம்

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி:அருணாச்சல பிரதேசத்தில் எல்லை பகுதியில் காணாமல் போன மிரம் தரோன், 17, என்ற சிறுவனை, இந்திய ராணுவத்திடம், சீனா ஒப்படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன், சமீபத்தில் இந்திய - சீன எல்லையில் காணாமல் போனார். இந்த சிறுவனை சீன
ChineseArmy, Missing, Arunachal, Indian Army, Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:அருணாச்சல பிரதேசத்தில் எல்லை பகுதியில் காணாமல் போன மிரம் தரோன், 17, என்ற சிறுவனை, இந்திய ராணுவத்திடம், சீனா ஒப்படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன், சமீபத்தில் இந்திய - சீன எல்லையில் காணாமல் போனார். இந்த சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றதாக எம்.பி., தபீர் கவோ தெரிவித்திருந்தார்.


latest tamil news


இது தொடர்பாக நம் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:சீன ராணுவத்தினரை 'ஹாட்லைன்' வாயிலாக தொடர்பு கொண்டு விபரத்தை கூறினோம். மூலிகை சேகரிக்கவும், வேட்டையாடவும் வந்த சிறுவன் வழி தவறி காணாமல் போனதாக தெரிவித்தோம். சிறுவனை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தனர். இதனையடுத்து மிரம் தரோன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என சீன ராணுவம் தெரிவித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில் கிரண் ரிஜ்ஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: சீன ராணுவம், காணாமல் போன மிரம் தரோன் என்ற சிறுவனை, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு சிறுவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
28-ஜன-202207:21:54 IST Report Abuse
Ramesh Sargam சிறுவன் மீண்டது மகிழ்ச்சி. ஒருவேளை சீனா அந்த சிறுவனை திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இந்நேரம் நமது பிரதமர் மோடியை 'கடித்து, குதறி' தள்ளியிருப்பார்கள். காங்கிரஸ் ஒருவேளை ஆட்சியில் இருந்திருந்தால் அந்த சிறுவன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி இருப்பானா என்பது சந்தேகம்தான்
Rate this:
Cancel
Narasimha -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-202220:26:34 IST Report Abuse
Narasimha மோடியை இதற்கும் குறை சொன்ன ராவுல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான்
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
27-ஜன-202220:04:13 IST Report Abuse
Sai சீனன் தொட்டு காட்றானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X