கூரையில் தோட்டா ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது வழக்குப்பதிவு

Added : ஜன 27, 2022 | |
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, வீட்டு கூரையில், துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, படைத்தளத்தை அசட்டையாக கையாண்டதாக, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், திருச்சி சரகத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, வீட்டு கூரையில், துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, படைத்தளத்தை அசட்டையாக கையாண்டதாக, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், திருச்சி சரகத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி மையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ., துாரத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவரது வீட்டின் ஆஸ்பெடாஸ் கூரையில், கடந்த 25ம் தேதி மற்றும் 26ம் தேதி தலா ஒரு துப்பாக்கி தோட்டா ஒன்று கிடப்பதாக பாடாலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்த, கூரையில் இருந்த தோட்டாவை பாடாலுார் போலீசார் கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.

இதைதொடர்ந்து, திருச்சி தடய அறிவியல் நிபுணர் ராஜேந்திரன் தலைமையிலான தடயவியல் நிபுணர்கள், தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்கள் தொலைத்த ஆஸ்பெட்டாஸ் சீட்டின் பகுதி ஆகியவற்றை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்காக எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து, விஏஓ நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் படைத்தளத்தை அசட்டையாக கையாண்டது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், இந்திய தண்டனைச் சட்டம் 286ன் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X