மயிலாடுதுறை: குத்தாலம் அருகே பாலையூரில் அமைந்துள்ள ஐய்யனார் கோவிலில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போயின. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேராவூர் பகுதியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் கடந்த 25ம் தேதி இரவு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலினை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவிலினுள் அய்யனார் சிலை அருகில் உள்ள சாமி பூர்ணா மற்றும் புஸ்கலா சிலையில் இருந்த சுமார் 1.1/4 கிராம் மதிப்புள்ள 2 தாலி திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் பித்தளை அண்டா, மணி, உண்டியலில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தசம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாலையூர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE