புதுடில்லி: இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இரண்டிற்கும் இடையே நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இருந்து கலந்து கொள்ள உள்ளார்.
இந்த கூட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். கஜகஸ்தான், கைர்க்ஸ் குடியரசு, தஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்டன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் எதிர்காலத்தில் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை இடவும் நட்புறவை பாராட்டவும் இந்த கூட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மத்திய ஆசிய நாடுகளின் உயர்மட்ட கூட்டமான இதில் முதன்முறையாக நாட்டின் தலைவர்கள் பங்கேற்று உள்ளதாகவும், கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி மத்திய ஆசிய நாடுகளை சந்தித்த பின்னர் தற்போது இந்த கூட்டத்தின் வாயிலாக தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE