திருவிழாவில் 205 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

Added : ஜன 27, 2022 | |
Advertisement
அரூர்: அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்படுகிறது. அச்சமூக மக்களின் வியாபாரம் மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழைவளம் உள்ளிட்டவைகளை வேண்டி, நடத்தப்படும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள,

அரூர்: அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்படுகிறது. அச்சமூக மக்களின் வியாபாரம் மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழைவளம் உள்ளிட்டவைகளை வேண்டி, நடத்தப்படும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, ஆவாரம் செடியின் அடியில், நேற்று முன்தினம் இரவு, நேர்த்திக்கடனாக, 10 ஆடுகள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 195 ஆட்டு கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. பின், அதன் இறைச்சிகளை அச்சமூகத்தை சேர்ந்த, 1,960 குடும்பத்தினருக்கு பங்கிட்டு வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X