ஆர்.ஓ., நிலையத்துக்கு தண்ணீர் நிறுத்தம்| Dinamalar

ஆர்.ஓ., நிலையத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

Added : ஜன 27, 2022 | |
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் டவுன் பஞ்.,ல் மக்கள் பயன்பாட்டிற்காக, 2017-18ல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டது. சில நாட்கள் வரை இதற்கு குடிநீர் வழங்கப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் அதற்கு டவுன் பஞ்.,

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் டவுன் பஞ்.,ல் மக்கள் பயன்பாட்டிற்காக, 2017-18ல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டது. சில நாட்கள் வரை இதற்கு குடிநீர் வழங்கப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் அதற்கு டவுன் பஞ்., நிர்வாகம் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்தியது. அப்பகுதியில் அரசு மருத்துவமணை, அரசு மேல்நிலைப்பள்ளி, ரயில்வே ஸ்டேஷன், குடியிருப்புகள் உள்ளன. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்று வந்தனர். உப்புநீரை சுத்திகரிப்பு செய்து நல்ல குடிநீர் வழங்கும் நோக்கதோடு வழங்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் தராமல் பஞ்., நிர்வாகம் தடை வதித்துள்ளது. போதிய பராமரிப்பின்றி குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக அதை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X