அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதப்பரப்புரை புகார் இல்லை என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
![]()
|
இது குறித்துதஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழு பள்ளியில் பார்வையிட்டனர். விடுமுறையின் போது மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்ற போது சம்பந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே தங்கி இருந்தார். ஜன.,10 ம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதால் மாணவி சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களை விட இந்து சமய மாணவ, மாணவிகளே அதிகம் பயில்கின்றனர். மத ரீதியிலான பிரசாரங்கள் தலைமையாசிரியராலோ மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பான புகாரகள் எதுவும் பெறப்படவில்லை. முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்விஅலுவலகத்திற்கு மதம் சார்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement