தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப்பாடல் என்பதை மதிக்கிறோம்: ரிசர்வ் வங்கி

Updated : ஜன 28, 2022 | Added : ஜன 27, 2022 | கருத்துகள் (26)
Advertisement
சென்னை:நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக

சென்னை:நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாரத மற்றும் வருந்தத்ததக்க சில தேவையற்ற கூற்றுக்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு என்கிற முறையில் நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.


latest tamil news



இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள் மண்டல இயக்குனர் எஸ் எம் என் சுவாமி தலைமையில் மாநில நிதி அமைச்சரை சந்தித்து இதன் தொடர்பான நிலைப்பாட்டை உறுதி செய்தனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-ஜன-202212:53:02 IST Report Abuse
sankar அஹங்காரம் பிடித்தவரோ. அப்படித்தான் தோன்றுகிறார் அம்மணி.
Rate this:
Soumya - Trichy,இந்தியா
28-ஜன-202214:17:27 IST Report Abuse
Soumyaஹீஹீஹீ போ போ போயீ போஸ்டர் ஒட்டு...
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-ஜன-202209:58:06 IST Report Abuse
J. G. Muthuraj தீப்பொறி கக்கும் கண்கள்....எதுக்கப்பா இவ்வளவு பெரிய கொடிய ரியாக்ஷன்?....இவர்கள் மாநிலத்தை மதிக்கிறார்களாம்....
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
28-ஜன-202209:08:51 IST Report Abuse
RandharGuy விளையாட்டு வினையாகும் ..தெரிந்து விளையாடுங்கள்.. இருக்கிறதை இழந்து விடாதீர்கள் ......அண்டி பிழைக்க வந்த இடத்தில சவடால் வேண்டாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X