ஜன., 28, 1925
கர்நாடகா மாநிலம் தும்கூரில், 1925 ஜன., 28ல் பிறந்தவர், ராஜா ராமண்ணா. சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்துவக் கல்லுாரியில், இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இங்கிலாந்து சென்று அணுக்கரு இயற்பியல், அணுவுலை வடிவமைப்பு ஆகியவற்றை கற்றார்.
கடந்த, 1972 முதல் 1978 வரை, இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணு ஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குனருக்கான ஆலோசனைக் குழு தலைவராகவும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குனராகவும் செயல்பட்டார்.
மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 'சிரிக்கும் புத்தர்' என்ற இந்தியாவின் முதல் அணுகுண்டு திட்டம், இவரின் கண்காணிப்பில் உருவானது.
இசை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். 1990ல், பாதுகாப்பு அமைச்சராகவும், 1997-ல் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றினார். 'பத்மஸ்ரீ, பத்ம விபூஷண்' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்; 2004 செப்., 24ல் தன் 79வது வயதில் காலமானார்.
'இந்திய அணுக்கரு உலையின் தந்தை' ராஜா ராமண்ணா பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE