வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 'வெல்கம் பேக் ஏர் இந்தியா..!' என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டாடா குழுமம் ஏர் இந்தியா தன்வசமானதை அடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போதுவரை 1,400 உள்ளூர் மற்றும் 1800 சர்வதேச விமான தளங்களை கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் வாங்கியுள்ளதால் டாடா குழுமம் ஏர் இந்தியாவில் பல வித மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
கடந்த 1932ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா, டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இதனையடுத்து 1946ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு 1953ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு உத்தரவின் பெயரில் அரசுடைமை ஆக்கப்பட்டது.
அரசுடைமையாக்கப்பட்ட போதிலும் 1977ஆம் ஆண்டுவரை ஜேஆர்டி டாடாவே அதன் தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு லட்சம் கோடி கடன் சுமையால் தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதனை அடுத்து பல நிறுவனங்கள் இதனை வாங்க போட்டியிட்ட நிலையில் தாய் நிறுவனமான டாடா இந்த போட்டியில் வென்று மீண்டும் ஏர் இந்தியாவை தன்வசம் மீட்டுள்ளது.
இதனையடுத்து இன்று ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ரத்தன் டாடா முன்னிலையில் டாட்டா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து காலத்துக்கேற்ப ஏர் இந்தியாவில் பலவித மாற்றங்களை கொண்டுவர ரத்தன் டாடா திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து டாடா குழுமம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. 'வெல்கம் பேக் ஏர் இந்தியா' என்ற வாசகத்துடன் விமானம் பறக்கும் ஓர் ஓவியத்தை டாட்டா குழுமம் பகிர்ந்துள்ளது/ இதன் மூலமாக ரத்தன் டாடா தனது பல ஆண்டு கால கனவை நனவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE