அகாலி தளம் எம்.எல்.ஏ.,வை கைது செய்ய தடை

Added : ஜன 27, 2022
Advertisement
புதுடில்லி : போதை பொருள் வழக்கில் அகாலி தளம் கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்ய ஜன.,31 வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் மஜிதியா தொகுதி எம்.எல்.ஏ., பிகாராம் சிங், 46. இவர், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் உள்ளார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு பஞ்சாப்

புதுடில்லி : போதை பொருள் வழக்கில் அகாலி தளம் கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்ய ஜன.,31 வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மஜிதியா தொகுதி எம்.எல்.ஏ., பிகாராம் சிங், 46. இவர், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் உள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, பிகாரம் சிங்கை ஜன., 31 வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X