சர்வதேச அளவில் சிலம்பத்தில் சாதனை : மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஜன 27, 2022
Advertisement
கோவில்பாளையம்:பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தேசிய மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், அப்துல் கலாம் உலக சாதனை இடைவிடாத சிலம்ப நிகழ்வு கடந்த 9ம் தேதி நடைபெற்றது.இதில், இந்தியா, நேபாளம், மலேசியா, இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய ஆறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றனர். 25 நிமிடம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றும் போட்டியில், கோட்டைப்
 சர்வதேச அளவில் சிலம்பத்தில் சாதனை : மாணவர்களுக்கு பாராட்டு

கோவில்பாளையம்:பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தேசிய மற்றும் தமிழ்நாடு கிளை சார்பில், அப்துல் கலாம் உலக சாதனை இடைவிடாத சிலம்ப நிகழ்வு கடந்த 9ம் தேதி நடைபெற்றது.இதில், இந்தியா, நேபாளம், மலேசியா, இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய ஆறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றனர். 25 நிமிடம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றும் போட்டியில், கோட்டைப் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 2ம் வகுப்பு மாணவர் அமிழ்தன், 4ம் வகுப்பு மாணவர் துஷ்யந்த், 8ம் வகுப்பு மாணவர் அன்பரசு ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.இதையடுத்து, சாதனை படைத்த மூன்று மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கோட்டைப்பாளையம், நடுநிலைப் பள்ளியில் நடந்தது. கொண்டையம்பாளையம் ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், தலைமை ஆசிரியை ஜெப பிச்சை மெடோஸ் ஆகியோர், மாணவர்களையும், பயிற்சியாளர் தென்னரசுவையும் பாராட்டி, பரிசு வழங்கி கவுரவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X