அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், ஒருவர் பலியானார். ஈரோடு மாவட்டம், கோணர்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி, 65, ஓலையூர் பெருமாள், 50, ராஜா, 27, ஆகியோர் சேலம் மாவட்டம், மேட்டூர் விஜய், 21, என்பவருக்கு சொந்தமான, டாடா சரக்கு வாகனத்தில், அந்தியூரிலிருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு, மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை விஜய் ஓட்டினார். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, மலைக்கோவிலூர் அடுத்துள்ள தகரகொட்டகை பகுதியை கடக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில், படுகாயமடைந்த பெரியசாமி, பெருமாள் ஆகிய இருவரையும் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெரியசாமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE